தீபாவளியை முன்னிட்டு கிராம குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பங்கேற்பு
இன்று 29 /10/ 2024 மாலை 5 மணி அளவில் திருச்சி கல்லணை அருகில் உள்ள கொவ்த்தரசநல்லூர் கிராமத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமாந் டிரஸ்ட் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் சுற்றி உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்களுக்கு புத்தாடை வழங்கும் விழா பல கிராமங்களில் நடைபெற்றது.
இதில் ஒரு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், மற்றும் பெரியவர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் வழக்கறிஞர் வெங்கட்டுக்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ நினைவு பரிசு வழங்கினார்.
புத்தாடைகளை பெற்றுக் கொண்ட கிராமத்தினர் அனைவரையும் வாழ்த்தி சென்றனர்.