தந்தை பெரியார் அரசு கல்லூரியில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மற்றும் மேகஸ்விசன் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் கா. வாசுதேவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் கணேசன் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ரெட் கிராஸ் தலைவர் இன்ஜினியர் ஆர். ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சிராப்பள்ளி மாவட்ட ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் துறை பேராசிரியருமான முனைவர் இரா. குணசேகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வரவேற்புரை ஆற்றினார்,
மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனையின் இலவச கண் மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் சதீஸ் கண்ணன் நன்றி யுரையாற்றினார்.
20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இம்முகாமில் மாணவ- மாணவிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்து பார்வை குறைபாடுகளை கண்டறிந்து குறைபாடுகள் நீக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.