புதுக்கோட்டையில் கராத்தே தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி.சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் புகாரி பட்டைகள் வழங்கினார் .
கராத்தே தகுதி பட்டை வழங்கும் விழா.
ஜப்பான் ஷூட்டோடியோ கராத்தே பள்ளி, ஸ்ரீ பரணி சிலம்பம், யோகா பயிற்சி பள்ளி மற்றும் புரூஸ்லீ கராத்தே பள்ளி இணைந்து நடத்திய கராத்தே தகுதி பட்டை வழங்கும் விழா புதுக்கோட்டை மாவட்டம் பேராம்பூர்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் திடலில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் சு.புகாரி கலந்து கொண்டு கராத்தே வீரர் வீராங்கனைகள் தேவிகா , அனுஸ்ரீ , மோனிஷா, ஹரிணி,மோனிகா ஸ்ரீ சரண், தேவா ஸ்ரீ ரிஷ்வந்த், ஹரிஸ் , நேகா, சிவதனுஷ்யா. சின்னதுரை,ரகு, மருதை விஷ்ணு, அகிலேஷ்.மதன்,
சரண், மான்ஸிகிரிடா, ரிஷிகா, ரிஷ்வந்த், ஹேமபிரபா ஆகியோருக்கு தகுதி பட்டைகள் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை தென் மாநில தலைமை பயிற்சியாளர் டி. மதுரை பழனி செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்கள் கராத்தே வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக புகாரி கலந்து கொண்டு கராத்தே வீரர்களுக்கு தகுதி பட்டை வழங்கினார்.
அருகில் தென் மாநில தலைமை பயிற்சியாளர் D.மதுரை பழனி உள்ளார்.