Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நோயாளிகளிடம் பணம் பறிக்கும் ஊழியர்கள். காவல்துறையிடம் ஒப்படைக்காதது ஏன் ?

0

 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரக்சரில் வைத்து நோயாளியை தள்ளி செல்ல ரூ.1000 கேட்ட நபர் மீது செய்தி வெளியான ஆறு மணி நேரத்தில் சலவை சலவை நிலையத்திற்கு பணி மாற்றினார் RM.

அடுத்த நாள் இதேபோன்று நோயாளிடம் ரூ.500 கேட்டு சிக்கிய
ஆண்டோ ராக்வின் என்ற ஊழியர் .

இவர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் இருந்து வந்த நிலையில் தற்போது நோயளிகள் அறுவை சிகிச்சைக்கு பின் வார்டுகளுக்கு OT யிலிருந்து வண்டிகளில் அழைத்து செல்வது இவரது வேலையாகும் அப்போது அப்பாவி ஏழை நோயளிகளிடமிருந்து ரூ.1500 லிருந்து, 2000 ரூபாய் வரை லஞ்சமாக வாங்கியுள்ளார்,

மேலும் இவர் மீது நடவடிக்கை எடுக்க நினைத்தால் நான் அமைச்சரின் ஆள் என இது நாள் வரை அதிகாரிகளை மிரட்டுவது இவரது வழக்கம் எனவே இவரை போன்ற நபர்களை வேலைக்கு அமர்த்துவது மிகவும் ஆபத்தான ஒன்றாக அமைந்துவிடும்.

ஆனால் நேற்று விசாரணை செய்து இவரையும் வேறு பணிக்கு மாற்றி உள்ளார் .

பெரிய பெரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில்
இவரை போன்ற கையூட்டுப் பெரும் நபர்களை காவல் துறை வசம் ஒப்படைத்து கைது நடவடிக்கை எடுத்தால் அரசு மருத்துவமனையில் ஏழை எளிய மக்களிடம் பணம் பறிக்கும் குற்றங்கள் குறையும்.

என ரமணா , (மத்திய மாவட்ட செயலாளர் , தமிழ் புலிகள் கட்சி திருச்சி) கூறி உள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.