ஆபத்தான முறையில் இயங்கும் திருச்சி எஸ் ஆர் வி பள்ளி வாகனம். சோதனையின் போது ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அதிகாரிகள் பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் அனுப்பியதன் விளைவு.பள்ளி குழந்தைகள் உயிர் பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? பெற்றோர்கள் எதிர்பார்ப்பு.
திருச்சி சமயபுரம் அருகே எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த தனியார் பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
மாணவ, மாணவியரை பள்ளிக்கு அழைத்து வர, 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் இக்கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் இயக்கப்படுகின்றன.
நேற்று முன்தினம் காலை திருச்சி, நம்பர் 1 டோல்கேட் பகுதியில் இருந்து மாணவ, மாணவியரை அழைத்துச் சென்ற பள்ளி வாகனத்தின் பின்பக்கம் கண்ணாடி இல்லை.அந்த இடத்தில், அட்டையை வைத்து அடைத்து, கயிறால் கட்டியிருந்தனர். ஆபத்தான முறையில் மாணவ, மாணவியரை அழைத்து சென்றதை பார்த்த பெற்றோரும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆண்டுதோறும் பள்ளி, கல்லுாரிகள் திறப்புக்கு முன், கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளால் ஆய்வு செய்த பிறகே, பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த அபாயகரமான பள்ளி வாகனம், அதிகாரிகளால் முறையாக ஆய்வு செய்யப்பட்டதா என கேள்வி எழுப்புகின்றனர் பெற்றோர்கள். மேலும், அதிகாரிகள் ஆய்வுக்கு பின், கண்ணாடி உடைந்திருந்தால், அதை மாற்றிய பின், பள்ளி நிர்வாகம், அந்த வாகனத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும்’ என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளி வானங்கள் ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் ஓரிரு பேருந்துகளில் சோதனை செய்துவிட்டு சென்றபின் ஆர்டிஓ அதிகாரிகள் தான் சோதனை மேல் மேற்கொள்வார்கள். திருச்சி கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் பெற்ற ஆய்வின்போது பல வாகனங்களை ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் பெற வேண்டியதை பெற்றுக் கொண்டு வாகனங்களை வரிசையாக அனுப்பி வைத்ததை பத்திரிகையாளர்களே நேரில் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .