
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கத் தலைவர்
பாலசுப்பிரமணியன்,
துணைத் தலைவர் மதியழகன்,
செயலாளர் சுகுமார், இணை செயலாளர் சலாம் சந்தோஷ்
செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன்,
முத்து, மாரி, சரவணன் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் ஆகியோர் பங்கேற்றனர்.