திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில்
மயங்கி விழுந்து
3 பேர் பலி.
திருச்சி மாவட்|டம் லால்குடி அன்பில் வடக்கு செங்கரையூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). இவர் திருச்சி ஜான் பஜாரில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை பார்த்துக் கொண்டிருந்த ராஜ்குமார் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை எடுத்த அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல், திருச்சி இ.பி. ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவரது மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் இவருக்கு குழந்தைகள் யாரும் இல்லை. இதனால் இவர் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வம் தனது வீட்டின் முன் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து செல்வம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார்.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து கோட்டை போலீசார் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல், எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு தேவாலயம் முன் கண்ணன் (56) என்பவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.