திருச்சி பொன்மலையில்
பட்டதாரி இளம்பெண் திடீர் மாயம்.
திருச்சி பொன்மலை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் சங்கவி (வயது 25). இவர் கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற சங்கவி, பின்னர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இந்த தகவலும் இல்லை .
இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பட்டதாரி பெண்ணை தேடி வருகின்றனர்.