திருச்சி மாநகரில் கஞ்சா,லாட்டரி விற்ற 31 பேர் கைது.
பணம், கஞ்சா பறிமுதல்.
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது
.இதையடுத்து திருச்சி மாநகரில் செசன்ஸ் நீதிமன்றம், திருவரங்கம், கோட்டை. காந்தி மார்க்கெட், பாலக்கரை தில்லை நகர், உறையூர் அரசு மருத்துவமனை ஆகிய போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிமாநி லாட்டரி சீட்டுகள் விற்றதாக 27 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் உறையூர் பகுதியில் சூதாடியதாக
இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சீட்டுகட்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கண்டோன்மென்ட் பகுதியில் 14 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் சிக்கினர்.
போலீசாரின் இந்த அதிரடி வேட்டையில் மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடப்பட்டது.