திருச்சி: ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதில் முன் விரோதம். வாலிபருக்கு அரிவாள் வெட்டு. சிறுவன் உள்பட 4 பேர் கைது.

திருச்சி:
ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதில் முன் விரோதம். வாலிபருக்கு அரிவாள் வெட்டு. சிறுவன் உள்பட
4 பேர் கைது.
திருச்சி தாரா நல்லூர் அலங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 20)
திருச்சி வீரம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன் (24). இவர்கள் 2 பேரும் பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு ஜிம்மில் உடல்பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் ஆணழகன் போட்டியிலும் பங்கேற்று வந்தனர்.
இதில் இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் வழக்கம்போல் சந்தோஷ் குமார்
ஜிம் பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிய போது அலங்கநாதபுரம் பூக்கொல்லை ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் அவரை கீர்த்தி வாசன், காந்தி மார்க்கெட் கல் மந்தை காலனி அலங்க ராஜன் (21 )வீரமணி,
சந்தோஷ் குமார் பிரவீன் (19)
சுந்தர் என்கிற
சுரேஷ் (19) திருச்சி வடக்கு தாராநல்லூர் முருகன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் கும்பல் வழிமறித்தது.
பின்னர் கீர்த்தி வாசன் அறிவாளால் சந்தோஷ் குமாரை வெட்டினார் இதில் அவரது தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
இதுகுறித்து சந்தோஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் கீர்த்தி வாசன், பிரவீன், சுந்தர் என்கிற சுரேஷ், மற்றும் சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பியோடிய மூன்று பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

