போலி பாஸ்போர்ட்டில்
கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்தவர் கைது
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று விமானம் வந்தது. விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அந்த பாஸ்போர்ட்டில்அவருடைய பெயர் கிருஷ்ணன் என்று இருந்தது.இதைத் தொடர்ந்து அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அந்த பயணி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வேண்டு மேகநாதன் (வயது 49) என்பதும்,இவர் தனது பிறந்த தேதியை மாற்றி போலி பாஸ்போர்ட் தயாரித்தது தெரியவந்தது.
இது குறித்து இமிகிரேசன் அதிகாரி போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.