திருச்சியில் அதிமுக பிரமுகரின் வீடு சூறை. 6 பேர் மீது கோட்டை காவல் நிலையத்தில் புகார்.
திருச்சி கள்ளர் தெரு சங்கிலி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம் பிள்ளை. இவரது மகன் டி.எஸ்.கோவிந்தன். அதிமுக பிரமுகர் .இவர் வெளியே சென்ற நேரத்தில் இவரது வீட்டிற்குள் கணவன் மனைவி உள்பட ஆறு பேர் கொண்ட கும்பல் புகுந்து வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடியது .
இது குறித்து கோவிந்தன் கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக நிர்வாகியின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.