Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் மரக்கன்று நடும் விழா .

0

 

திருச்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு மற்றும் மைதானத்தில் மரகன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

மரம் வளர்ப்போம் புவிப் பந்தை பாதுகாப்போம் எனும் முழக்கத்துடன் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

சாலையில் செல்வோர் பல இன்னலுக்கு ஆளாகின்றனர் பல இடங்களில் மரங்களின் நிழலை தேடி மரத்தடியில் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு வாகனங்களை இயக்குகின்றனர். தற்போது தான் பெரும்பாலனவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவம் தெரிகிறது . ஆகவே இந்த மரங்களை வளர்க்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பிளாஸ்டிக் பையை தவிர்ப்போம், துணிப் பையை பயன்படுத்துவோம் ,
பசுமையை வளர்ப்போம், புவியைக் காப்போம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தேசிய தடகள விளையாட்டு வீரரும் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தின் மேற்பாற்வையாளருமான தமிழரசன், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், தடகள விளையாட்டு பயிற்ச்சியாளர் முனியாண்டி, பெட்காட் அமைப்பின் திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திக், தாய் நேசம் அறக்கட்டளையின் தலைவர் ஹப்சி, சத்தியாராக்கினிசமூக செயற்பாட்டாளர் ராபி ஆர்ம்ஸ்ட்ராங், ராதாகிருஷ்ணன்

மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள பயிற்ச்சியாளருமான சுரேஷ் பாபு, மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, இணைச் செயலாளர் அல்லிகொடி அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ், அருள் செல்வி, மார்கரெட், சத்தியகலா,பேபிபானு, அன்புரோஸி, ஜஸ்வர்யா, போவாஸ்,சதிஷ் அபிஷா,ஜெனி,கால்பந்து விளையாட்டு பயிற்ச்சியாளர் அம்ஜித் மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.