Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகைகள் திருட்டு .

0

'- Advertisement -

 

Ad banner

எடமலைப்பட்டி புதூரில் ஆசிரியை வீட்டில் நகைகள் திருட்டு.

திருச்சி கிராப்பட்டி அருணாச்சல நகர் 10வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அழகு ராஜன் (வயது 36) இவர் திருச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 31/2 பவுன் நகை மற்றும் 2 கிராம் டாலர் சில்வர் அட்டிகை ஆகியவற்றை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
பின் வீட்டுக்கு அழுகு ராஜன் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது தொடர்பாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் அழகு ராஜன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை வீட்டில் நகைய திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.