திருச்சியில் கள்ளச் சந்தையில் விற்க வைத்து இருந்த 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.4 சக்கர வாகனங்களுடன் 2 பேர் கைது
தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டலக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் கண்ணதாசன் மற்றும் காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனா்.
இந்நிலையில், நேற்று இரவு திருச்சி தென்னூா் ரங்கநாதபுரம் ஆபிஸா்ஸ் காலனி அருகே ரேசன் அரிசி மூட்டைகளை சிலா் வைத்திருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றிக் கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை செய்த போது, அவா்கள் தென்னூா் குத்பிஷா நகரைச்சோந்த ப.அப்துல் சுக்கூா் (வயது 33) மற்றும் அதே பகுதியைச் சோந்த ஹ.சதாம் உசேன் (32) என்பதும், ரேசன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 1,400 கிலோ அரிசி, மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.