தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மார்க் நிறுவனம் மூலம் தமிழக முழுவதும் உள்ள கடைகள் மூலம் மதுபானங்கள் நேரடியாக பொதுமக்களுக்கு சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 4500 ககும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் நேரடியாக விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபானங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் இருந்து வந்த நிலையில் தற்போது தமிழில் பெயர் அச்சிடப்பட்ட மதுபானத்தை தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வீரன் என்ற பெயரில் தற்போது பிராந்தி வகை மதுபானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர முடியாது தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானத்தில் தமிழைக் கொண்டு வந்துள்ளதாக இணையதளவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மதுபானத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.