12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த
தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
திருச்சி மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு.
திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் ராஜா தெரு பகுதியை சேர்ந்தவர் ஜான் மேக்சின்(வயது 40) தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 2018 மே 1ம் தேதி முதல் சில மாதங்கள் அதே பகுதியில் உள்ள ஒரு 12 வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
இது குறித்து அவரது பெற்றோர் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 – 9-2020 அன்று மேக்ஸிமேனை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி ஸ்ரீவத்சன் குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க கலெக்டருக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஜாகிர் உசேன் வாதாடினார்.