Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நகர வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல்: புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

0

'- Advertisement -

 

திருச்சி நகர வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலில்
புதிய நிர்வாகிகள் தேர்வு.

திருச்சி நகர வழக்கறிஞர் சங்கத்தின் 2024 – 2025
நிர்வாகிகள் தேர்தல் சாஸ்திரி ரோட்டில் உள்ள ரெங்கா ஹாலில் நடைபெற்றது.

தேர்தலை திருச்சி தாய் சங்கத்தின் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன் , செயலாளர் கே. கண்ணன் ஆகியோர் நடத்தினர். முன்னாள் நகர வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ஏ.புஷ்பராஜ் கலந்து கொண்டு பேசினார்.

இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவராக
என்.அன்பழகன்,
செயலாளராக ஜெ.தாஸ் பிரகாஷ்,துணைத் தலைவர்களாக
பி.ஏ.தியாகசுந்தரம், சி.முத்துமாரி,
பொருளாளராக எஸ்.சற்குருநாதன்,
இணைச் செயலாளர்களாக
எஸ்.அருண் சுந்தர். ஆர். சுரேஷ்
ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்வில் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் எம். ராஜேந்திர குமார் , மூத்த வழக்கறிஞர்கள் எம்.எஸ்.வீரமணி, எஸ்.பி. சௌந்தர்ராஜன், எஸ். குணசேகர், என்.அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.