

முப்பெரும் விழா.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாநகரக் கிளை சார்பில் முப்பெரும் விழா பனானா லீப் உணவக கூட்டரங்கில் மாநகரத் தலைவர் ஹக்கிம் அலி தலைமையில் நடைபெற்றது..
ஓய்வு பெற்றோர் பிரிவின் மாநகர தலைவர் வேளாங்கன்னி முன்னிலை வகித்தார்.
மாநகரச் செயலாளர் பெர்ஜித் ராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாநிலத் தலைவர் குணசேகரன் அவர்களும்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களும்
பணி நிறைவு பெற்ற 11 ஆசிரியர்களுக்கும்
பேரியக்கத்தின் இயக்க உறுப்பினராக இருந்து புதுக்கோட்டை ஒன்றிய வட்டார கல்வி அலுவலராக பதவி உயர் பெற்ற தலைமை ஆசிரியை திருமதி .ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும்
பொன்னாடை அணிவித்தும் நினைவு பரிசு வழங்கியும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
*பனானா லீப் உரிமையாளர் மனோகரன் அவர்கள் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.
பேரியக்கத்தின் மாநிலப் பொருளாளர் நீலகண்டன் இயக்க உரையாற்றினார்.
பேரியக்கத்தின் மாநில துணைத் தலைவர் சிவக்குமார்,
மாநில செயற்குழு உறுப்பினர் கலிய பெருமாள்,
திருச்சி நகர சரக வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜோசப் அந்தோணி மற்றும் அர்ஜூன்.
புதுக்கோட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் .ராஜராஜேஸ்வரி,
மாநகராட்சி கோட்டம்- 5 ன் கோட்டத்தலைவர் விஜயலெட்சுமி கண்ணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியப் பெருமக்களை வாழ்த்தினர்.

நகரக் கிளையின் வழிகாட்டியாக திகழும் அமல்சேசு ராஜ் அவர்களும் பணி நிறைவு பெறும் ஆசிரியப் பெருமக்களை வாழ்த்தி பேசினர்.
பணி நிறைவு பெற்ற இடைநிலை ஆசிரியை ஆணி சேவியர் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
மாநகரப் பொருளாளர் திருமதி அமுத தெரசா அவர்கள் நன்றி கூறினார்.
மருங்காபுரி, தொட்டியம், வையம்பட்டி, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், துறையூர்,முசிறி உள்ளிட்ட அண்டை வட்டாரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாநகரக் கிளையின் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

