“அரசுப் பள்ளியில் பாத பூஜை விழா”
.தா.பேட்டையை
அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பாத பூஜை விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதவுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவும் வாழ்வில் சகல விதமான வளங்களையும் பெற்று மேன்மையடையவும் வேண்டி பெற்றோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்காக பாத பூஜை விழா நடைபெற்றது .
மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் பாதங்களை பால் மற்றும் பன்னீர் கொண்டு கழுவி சந்தனம் மற்றும் குங்குமத்தால் பொட்டிட்டு அவர்களின் பாதங்களுக்கு மலர் தூவினர். தங்களுக்காக உழைத்து வெடித்துப்போன பாதங்களைத் தொட்டு வணங்கி தங்களின் சிறுசிறு பிழைகளை மன்னித்துத் தங்களை வாழ்த்தும்படி கண்ணீருடன்
வணங்கி நின்றனர். பிள்ளைகளின் கண்ணீரைத் துடைத்த பெற்றோர்களும் கண்கலங்கினர் .
அவர்கள் வாழ்வில் வெற்றி பெறவும் எல்லாவிதமான
மேன்மைகளை அடையவும் வாழ்த்துக்கள் கூறி ஆசீர்வதித்தனர்.
இந்த இனிய விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். ஆசிரியர் நிர்மலா விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வரவேற்புரை ஆற்றினார்.
ஆசிரியர்கள் சித்ரா ,தண்டபாணி ,சத்தியா,சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக ஆசிரியர் தேவ சுந்தரி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது .
பெற்றோர்களின் தியாகங்களைப் பிள்ளைகள் நினைத்துப் பார்க்கும் விதமாக அமைந்த இந்த விழாவை ஊர்ப் பொதுமக்களும் பள்ளி மேலாண்மைக் குழுவினரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பெரிதும் பாராட்டினர்.