திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் சாரல் பதிப்பகத்தின் முதலாவது நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு அஜந்தா ஹோட்டல் நிர்வாக இயக்குனர் வேணுகோபால் தலைமை வகித்தார் . தொகுப்பாசிரியர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.
கண்டுபிடிப்புகளின் வரலாறு நூலின் முதல் பிரதியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(ஓய்வு) முத்துகிருஷ்ணன் வெளியிட பேராசிரியர் பரமசிவம் பெற்றுக் கொண்டார்.
உலக சிறப்புகளை வரலாறு நூலினை செல்வராஜ் வெளியிட பனானா லீப் உரிமையாளர் மனோகரன் பெற்றுக்கொண்டார் .
சாதித்த பெண்களின் வரலாறு நூலினை காவேரி மகளிர் கல்லூரி முதல்வர் சுஜாதா வெளியிட முனைவர் கல்பனா பெற்றுக்கொண்டார் .
வரலாறு படைத்தவரின் வரலாறு நூலினை ஜோசப் கல்லூரி முன்னாள் பேராசிரியர் பாப்பு பெஞ்சமின் இளங்கோ வெளியிட தேசியக் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் ராகவன் பெற்றுக் கொண்டார் .
இந்த நூல் வெளியீட்டு விழாவில் வழக்கறிஞர் நல்லையம் பெருமாள் , திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் ஜவகர் ஆறுமுகம் , சிஇ மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜேம்ஸ், புத்தக விநியோகஸ்தர். ஜெயராமன் , பத்திரிக்கையாளர் வளையாபதி , காவேரி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் புண்ணியமூர்த்தி, பிரபல இருதய நோய் மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .
நிகழ்ச்சியில் இன்ஸ்டன்ட் பிரிண்டர்ஸ் ஜவகர் ஜெயசீலன், ஜோதிடர் தாமரைச்செல்வன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர் .
முடிவில் தொகுப்பாசிரியர் ஜெய்பிரகாஷ் நன்றி உரை வழங்கினார் .