மதுரை மாவட்டத்தில் உள்ள ஆழ்வாழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் வீடியோ காலில் பேசியுள்ளனர்.
காலப்போக்கில் ஆழமான இந்தப் பழக்கம் இருவரும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுவதற்கு வழி வகுத்தது. ஆனால், இந்தக் காதல் கசந்தபின், இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வரத் தொடங்கியதால், அந்தப் பெண் அருண்குமாரை விட்டு முழுவதுமாக விலக முற்பட்டுள்ளார்.
அப்போது, அருண்குமார் அவர்கள் இருவரும் முன்பு பேசிய வீடியோ காலை பதிவு செய்து வைத்திருந்ததைக் காண்பித்து அந்த பெண்ணை மிரட்டத் துவங்கியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போன அந்த பெண், சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார்.
அந்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த வீடியோ அனைத்தையும் அழித்து விட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.