திருச்சியில் விடுதியில் தங்கியிருந்த
கல்லூரி மாணவி திடீர் மாயம்
மதுரை வேலூர் சொக்கலிங்கபுரம் காமராஜர் வீதியை சேர்ந்தவர் அன்புச்செல்வன் .இவரது மகள் சுமிக்சவர்த்தினி (வயது 18). திருச்சியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் புத்தூரில் உள்ள பெண்கள் விடுதி வந்து தங்கி படித்து வருகிறார். சம்பவத்தன்று விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்ற சுமிக்சவர்த்தினியை காணவில்லை.
இது குறித்து அவரது தந்தை அன்புச்செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.