
திருச்சி கருப்பண்ணசாமி கோயிலில் நடைபெறும் 47 ஆம் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் விழா வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
திருச்சி கண்டோன்மென்ட் கான்வென்ட் சாலையில் உள்ள ராஜ கணபதி முன்னுடையான், மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி, முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பிப்ரவரி 6ம் தொடங்கியது. அன்று முதல் மஞ்சள் காப்பும், 13 ஆம் தேதி இரண்டாம் மஞ்சள் காப்பும் நடைபெற்றது. இதையடுத்து பிப்ரவரி 20 (செவ்வாய்) இரவு 12.5 மணிக்கு திருத்தேர் வீதி உலா, புதன் மாலை 5 மணிக்கு மாவிளக்குப் பூஜை, இரவு 9.05 மணிக்கு கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி, வியாழன் காலை 10.05 மணிக்கு ஒத்தக்கடை மந்தையில் குட்டி குடித்தல் விழாவும் நடைபெற உள்ளது.

வெள்ளிக்கிழமை மதியம் 12.05 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி, சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து காவிரியாற்றில் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பூ விடும் விழா, இரவு 7 மணிக்கு விடையாற்றியுடன் திருவிழா முடிகிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் குழுவினா், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

