திருச்சியில்
கஞ்சா, லாட்டரி விற்ற 5 பேர் வாகனம் செல்போனுடன் கைது.
திருச்சி , ஸ்ரீரங்கம் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கஞ்சா விற்றதாக சக்திவேல், ஹரிஹரன் ஆகிய இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதே போல் பிராட்டியூர் பகுதியில் கஞ்சா விற்றதாக பிரகாஷ் என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர் .இந்த மூன்று பேரிடம் இருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலக்கரை பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக நாகரத்தினம், ஆரோக்கியதாஸ் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.