திருச்சி காந்தி மார்க்கெட்டில்
எலக்ட்ரிகல் பொருட்களை திருடிய வாலிபர் கைது .
திருச்சி தென்னூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 68). இவர் வீடு கட்டும் பணிக்காக மகாலட்சுமி நகர் விஸ்தரிப்பு அருகில் உள்ள தனரத்தினம் நகரில் எலக்ட்ரிகல் வயர் மற்றும் எலக்ட்ரிக்கல் சாமான்கள் வாங்கி வைத்திருந்தார்.
சுமார் 25,000 ரூபாய் மதிப்புள்ள இந்த பொருட்கள் திருடு போய்விட்டது.
இது குறித்து சம்சுதீன் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிந்து திருடிய மர்ம நபர்களை
தேடி வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த விஜய் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்த எலக்ட்ரிக்கல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.