திருச்சி கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த அழுகிய நிலையில் பெண்ணின் பிணம். கொலை செய்து வீசினார்களா? போலீசார் விசாரணை.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் பிணம் .
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின் சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி அஜய் தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளர் விதுன் குமார் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்த வந்தனர்.
கொள்ளிடம் பாலத்தின் ஆற்றின் நடுபகுதியில் பாதி எரிந்த அழுகிய நிலையில் பெண் சடலம் கைப்பற்றி இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ?எதற்காக இங்கு வந்தார்? யாரேனும் கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டு விட்டு சென்றார்களா? என கொள்ளிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.