விடியா திமுக அரசை கண்டித்து நாளை நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு .
திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
ஆஇஅதிமுக பொது செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் படி
பட்டியல் இன மாணவியின் மீது வன்கொடுமையை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசை கண்டித்து நாளை மாநகர மாவட்ட செயலாளரான எனது தலைமையில் திருச்சி மரக்கடை எம் ஜி ஆர் திடலில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான டி. ரத்தினவேல் அவர்கள் கண்டன உரை ஆற்ற உள்ளார் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பொது குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள்,
நிர்வாகிகள்,
செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் , பொதுமக்கள் என அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
என மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார்