சோமரசம்பேட்டையில் தைப்பூச விழாவை முன்னிட்டு 5 ஊர் சாமிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 2 ஊர் சாமிகள் கலந்து கொள்ளாதது ஏன் ?…
திருச்சி அருகேயுள்ள சோமரசம்பேட்டையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 3 ஊா் கோயில் சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை
நடைபெற்றது.
இதில் இரு கோயில் சுவாமிகள் வரவில்லை.
சோமரசம்பேட்டையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஐந்து ஊா் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடாகி, ஒரே இடத்தில் சந்திக்கும் நிகழ்வு நடைபெறும். ஆனால் நிகழாண்டு சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன், பொன்மணி சமுத்திரம் காசி விஸ்வநாதா் உடன் விசாலாட்சி, உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜிவிநாதா் ஆகிய 3 கோயில் சுவாமிகள் சந்திப்பு மட்டுமே நடைபெற்றது.
வயலூா் மற்றும் அல்லித்துறை கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால், திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனவே வயலூா் முத்துக்குமாரசாமி மற்றும் அல்லித்துறை பாா்வதி ஈஸ்வரா் ஆகிய கோயில்களில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெறவில்லை. இதனால் 3 ஊா் சுவாமிகள் சந்திப்பு நிகழ்வு மட்டுமே நிகழாண்டு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வயலூா் கோயில் நிா்வாக அலுவலா் அருண்பாண்டியன், சோமரசம்பேட்டை கோயில் நிா்வாக அலுவலா் பொன். மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளா் முகமது ஜாபா் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா்.