இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவர் இடிமுரசு இஸ்மாயில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது :.
ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து சுதந்திரம் பெற்றபிறகு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ல் பிரிட்டீஷ் அமைப்புச் சட்டம் கைவிடப்பட்டு இந்தியாவுக்கான புதிய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைபடுத்திய நாள் குடியரசு நாளாகும்.
வளமான வரலாறு, ஜனநாயக கொள்கைகளுக்கான பெருமைக்குரிய நாளாக மட்டுமில்லாமல் நாட்டிற்க்காக போராடி ரத்தம் சிந்தி உயிர்தியாகம் செய்த உள்ளங்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம்.
அரசியலமைப்பு நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் மதச்சார்பற்ற தன்மையை நிலைநிறுத்தும் நாளான குடியரசு தின வாழ்த்துக்களை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்லாட்சியின் நாயகர் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழகம் வளர்ச்சியடைய என்றும் துணை நிற்போம் என கூறி உள்ளார்.