அயோத்தி ராமபிரான் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி திருச்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய காவல் துறை மறுப்பு. பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் கடும் கண்டனம்.
ராமபிரானின் ஆலய கும்பாபிஷேகம் நாளை அயோத்தியில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
இதற்காக இந்தியா முழுவதும் இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .
மேலும் அனைத்து முக்கியமான இடங்களிலும் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியினை நேரடி ஒளிபரப்பு செய்து ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்க பாரதிய ஜனதா கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார் . .
இந்நிலையில் தமிழகத்தில் திமுக அரசு கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் எனக்கூறி அனுமதி மறுத்து உள்ளனர் . இதனை மீறி தமிழகம் எங்கும் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்து அன்னதானம் வழங்கப்படும் என மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார் .
திமுக அரசு எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் அன்னதானம் செய்யலாம், திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறி இருந்த நிலையில்
திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் காவல் நிலையங்களில் அனுமதி மறுத்த கடிதங்களை வெளியிட்டுள்ளார் .
மேலும் அனுமதி மறுத்த காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்
மேலும் அனுமதியினை மீறி கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.