நிரந்தர பட்டாசு கடைக்கு 5 வருட உரிமம் வழங்க வேண்டும். திருச்சி நடைபெற்ற தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் .
தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் – தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு திருச்சியில் கோரிக்கை.
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில தலைவராக ராஜா சந்திரசேகர், மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன், மாநில பொருளாளராக கந்தசாமி ராஜன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சால்வே அனைத்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் கூறுகையில்..,
கடந்த வருட தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகளுக்கு தமிழக அரசு தாமதமாக உரிமம் வழங்கியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் யார் வியாபாரம் செய்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது. விதிகள் மீறி செயல்பட்ட ஒரு சில பட்டாசு கடைகளில் நடந்த விபத்து காரணமாக உரிமம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. வியாபாரிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த வருடம் இதுபோல் நடக்காமல் தமிழக அரசு உடனடியாக உரிமத்தை வழங்க வேண்டும் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தற்காலிக விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் இதே போல நிரந்தர பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு ஐந்து வருடத்திற்கான உரிமம் வழங்க வேண்டும் என கூறினார்.