திருச்சியில்
மணல் கடத்திய
2 பேர் கைது
வாகனம் பறிமுதல்.
திருச்சி பஞ்சப்பூர் கோரையாறு பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து திருச்சி கே.சாத்தனூர் கிராம நிர்வாக குமாரவேல் எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் அளித்தார் .
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று தீவிரமாக கண்காணித்து வாகனத்தில் மணல் கடத்தியதாக சந்திரசேகர், கீர்த்திக் ரோஷன் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.