Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அறிமுக தொடரிலே வலிமையாக தடம் பதித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் .

0

'- Advertisement -

 

தென்னாப்ப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

அதேபோல் 3 போட்டிகளில் விளையாடிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மிகச்சிறப்பாக இளம் வீரர்களை வழிநடத்தி கோப்பையை வென்றுள்ளார். அதேபோல் டிஆர்எஸ் மற்றும் பவுலிங் மாற்றங்களிலும் கேஎல் ராகுலின் தேர்வுகள் மிகச்சிறப்பாக இருந்தது.

உலகக்கோப்பை தொடருக்கு பின் ஒவ்வொரு தொடரிலும் சிறந்த ஃபீல்டருக்கான விருது இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரால் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் வழங்கி வந்த நிலையில், இந்த ஒருநாள் தொடருக்கு ஃபீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் அஜய் ரத்ரா செயல்பட்டார்.

இந்த நிலையில் அவரும் சிறந்த ஃபீல்டருக்கான விருதை அளித்து கலாச்சாரமாக மாற்றியுள்ளார். இந்த தொடரில் சிறந்த ஃபீல்டருக்கான விருது தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு அளிக்கப்பட்டது. இந்த ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் 6 கேட்ச்களை பிடித்திருந்தாலும், அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் சாய் சுதர்சனுக்கு அளித்து அணியினர் உற்சாகப்படுத்தினர். கிளாஸன் கொடுத்த கேட்சை அவர் பிடித்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

ஏற்கனவே முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக செயல்பட்டு அரைசதம் அடித்தார். 3வது ஒருநாள் போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பினாலும் ஃபீல்டிங்கில் பாய்ந்து கொண்டே இருந்தார். இதன் மூலம் அறிமுக தொடரிலேயே சாய் சுதர்சன் மிகவும் வலிமையாக தடம்பதித்துள்ளதாக பார்க்கப்படுகிறறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.