திருச்சி மாவட்டம் அதவத்தூர்ரை சேர்ந்தவர் துரைராஜ், மகேஸ்வரி தம்பதியரின் மகள் ஹர்ஷிதா (வயது 7) இவர் அங்குள்ள திருத்துவ மானிய தொடக்கப் பள்ளியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.சிறு வயது முதல் துருதுரு என்று இருக்கும் ஹர்ஷிதா பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளார்
இவர் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது முதன் முதலில் அவரது பள்ளியில் படைப்பாளியும் விருதுகளும் என்ற தலைப்பில் கடந்த 2020 ம் ஆண்டு தமிழ் துறை சார்பில் இணைய வழி வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்பாக பேசி பாராட்டு சான்றிதழை பெற்றார். இதைத் தொடர்ந்து கல்வி வளர்ச்சி நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான இணைய வழி வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.
மேலும் ஓவிய போட்டியிலும் கலந்து கொண்டு தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தினார். இதேபோன்று 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி இந்திய விடுதலை நாளுக்காக திண்டுக்கல் தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் நடந்த தமிழகமும், இந்திய விடுதலையும் என்னும் தலைப்பில் நடைபெற்ற இயங்கலை திறனறிவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றார்.இதை தவிர அதவத்தூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் குழந்தை கல்வி பெண் சிசுக்கொலை தடுப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சுற்றுப்புற சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு செய்திகளை மேடையில் ஏறி மக்கள் முன்பு தைரியமாக அழகாக அனைவருக்கும் புரியும் வகையில் பேசி பாராட்டை பெற்றுள்ளார்.
சுற்றுப்புற சுகாதாரம் என்னும் தலைப்பில் பேசி முதல் பரிசு பெற்றுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு வேதாரணியம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாடல் கல்லூரி சார்பில் நேர யுகேந்திரா அமைப்பு சார்பில் தேசிய அளவில் கொரோனா 19 விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்ஷிதா கலந்துகொண்டு கொரோனா காலத்தில் பொதுமக்கள் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எந்தெந்த வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அழகாக பேசி பாராட்டு பெற்றார்.
மேலும் உலக சுகாதார நிறுவனம் சார்பில் நடைபெற்ற கொரோனா 19 -விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றுள்ளார்.
இதேபோன்று 2020 ம் ஆண்டு இணைய வழி மூலம் கொரோனா விழிப்புணர்வு கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார்.
மகாத்மா காந்தி நேஷனல் கவுன்சில் சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு நோபல் ஹுமினாட்டி விருததை பெற்றுள்ளார்.
சிறுவயதில்
ஹர்ஷிதாவின் தாய் மகேஸ்வரி காலில் அடிபட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டில் இருந்த இரண்டாவது மகன் ஒரு அறையில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்பொழுது திடீரென்று அங்கு இருந்த மண்ணெண்ணெய் கேனையும், அருகில் இருந்த விளக்கையும் தட்டி விட்டான். இதையடுத்து திடீரென்று தீப்பிடித்து அந்த அறை முழுவதும் பற்றி எரிந்தது. மகேஸ்வரி பக்கத்து அறையில் இருந்ததால் அவருக்கு இந்த சம்பவம் நடந்தது பற்றி உடனடியாக தெரியவில்லை. இந்நிலையில் அந்த அறைக்கு வந்த ஹர்ஷிதா அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஒடி போகாமல் தையரியமாக சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த வாளியில் தண்ணீர் எடுத்து வந்து அந்த அறை முழுவதும் ஊற்றி தீயை தனி ஆளாக நின்று அணைத்தார். பிறகு தான் அவரது தாய் மகேஸ்வரிக்கு விஷயம் தெரிந்து பதறி அடித்து ஓடி வந்தார் சரியான நேரத்தில் ஹர்ஷிதா அன்று தீயை அணைக்கவில்லை என்றால் அவருடைய தம்பி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பது மட்டுமல்லாமல் இவர்களது வீட்டு அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மீது தீப்பற்றி வெடித்து கிராமத்தில் பெரும் விபத்து நடந்திருக்கும்.
ஹர்ஷிதாவின் இந்த துணிச்சலான செயலை கண்டு கிராம மக்கள் அனைவரும் பாராட்டினர்.சிறுவயது முதலே அரசு பள்ளி மாணவி ஹர்ஷிதா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்னும் பல சாதனகளை செய்ய திருச்சி எக்ஸ்பிரஸ் சார்பில் வாழ்த்துகிறோம்.