திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மற்றும் விராலிமலை கோகிலா கல்லூரி இணைந்து நடத்திய ரத்த தான முகாம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக விராலிமலை கோகிலா கலை அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் மற்றும் விராலிமலை கோகிலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின்படி இரத்ததான முகாம் ஆனது விராலிமலை கோகிலா கலை அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் ரத்ததான முகாமை துவக்கி வைத்து ரத்ததானம் செய்வதன் மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள் மற்றும் சிறப்புகள் பற்றி சிறப்புரையாற்றினார்.
கோகிலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் B.T.அரசகுமார் தலைமை தாங்கி தலைமையுறை ஆற்றினர், கல்லூரியின் முதல்வர் முனைவர் தியாகராஜன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த முகாமில் கோகிலா கல்லூரியின் செயலாளர் சுரேஷ், புதுக்கோட்டை மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ராஜா முகமது,, யூத் ரெட் கிராஸ் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் தயாநிதி மற்றும் கோகிலா கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த ரத்ததான முகாமில் கோகிலா கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த 200 மாணவ மாணவிகளுக்கு இரத்த வகைகள் கண்டறியப்பட்டு அதில் 30 மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ரத்த தானம் செய்தனர்.
இந்த முகமானது புதுக்கோட்டை மாவட்ட அரசு ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் சரவணன் மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்த முகாமை கோகிலா கலைக்கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர். ஆனந்த் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்து திரும்பட ஒருங்கிணைத்து இருந்தார்கள்.