திருச்சி ஐயப்ப சங்கம் சாா்பில் கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள இக்கோயிலில் 5ஆவது குடமுழுக்கையொட்டி 39ஆவது மண்டல பூஜை கடந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. வரும் டிச.27 வரை நடைபெறும் மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வாக நேற்று மகா அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
இன்று குடமுழுக்கு பூா்வாங்க பூஜைகளும், நாளை வெள்ளிக்கிழமை (டிச.8) காலை 9.10 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் குடமுழுக்கும் நடைபெறும்.
தொடா்ந்து டிச.9 தொடங்கி 14ஆம் தேதி வரை ஐயப்பனுக்கு பிரம்மோத்ஸவ பூஜைகளை சபரிமலை பிரதான தந்திரி கண்டரு மோகனரு நடத்தவுள்ளாா்.
முன்னதாக சனிக்கிழமை காலை 8 மணிக்கு வலம்புரி சங்காபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் மண்டல பூஜை முடியும் வரை தினமும் பூஜைகள், அபிஷேகம், லட்சாா்ச்சனை, பக்திச் சொற்பொழிவு, மற்றும் இன்னிசை நிகழ்வுகள் நடைபெறும்.
விழா நாள்களில் தினமும் காலை பிரசாதம் வழங்கப்படுகிறது.
இவ்விழா ஏற்பாடுகளை ஐயப்ப சங்கத்தினா் செய்தனா்.