திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும் ( 23.12.2023) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ் மாதத்தில் மார்கழி மிகவும் விசேஷமான ஆன்மீக மாதமாகும். இந்த மார்கழி மாதத்திற்கு இன்னொரு பெயர் தருமாதம் என்று அழைக்கப்படும்.
இந்த மாதத்தில் வளிமண்டலங்களில் ஓசன் மண்டபங்களில் தொலைவில் ஏற்பட்டு அதன் மூலம் பூமிக்கு சுத்தமான ஆக்சிஜன் அதிகாலையில் உருவாகும் இந்த சுத்தமான ஆக்சிஜினை நாம் அனைவரும் சுவாசித்தால் உடல் ஆரோக்கியமும் நலமுடன் வாழ்வோம் என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்கழி மாதம் பெருமாளை தரிசனம் செய்வதன் மூலம் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், ராகு கேது பெயர்ச்சி தொழில் வளர்ச்சி நடைபெறும் என்பது ஐதீகம். வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும் ( 23.12.2023) சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சியிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள், தமிழ்நாடு அரசின் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.