Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எஸ் பி அலுவலகத்தில் உல்லாசமாக இருந்த ஆண்,,பெண் போலீஸார் சஸ்பெண்ட்.

0

 

பூட்டிய அறைக்குள் அரைகுறை ஆடைகளுடன் தனிமையில் இருந்த ஆண், பெண் காவலர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நகர் அடுத்துள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிய எஸ்.பி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் பெண் காவலர் ஒருவர், இரவு பணியில் இருந்தார். அப்போது நள்ளிரவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஏசி அறையில் முனங்கல் சத்தம் வந்துள்ளது.

இதுதொடர்பாக ஆயுதப்படை இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்பட்டவில்லை. நீண்ட நேரம் பலமாக தட்டியபிறகு கதவை திறந்தனர்.
அப்போது ஆண், பெண் காவலர்கள் அரைகுறை ஆடையில் இருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் ஆண் காவலர் அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்ததும், பெண் காவலர் குத்தாலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து பணியின் போது ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட காவலர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.