Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்டில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு. முதியவர் போக்சோவில் கைது.

0

'- Advertisement -

 

டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த
ஓய்வு பெற்ற பெல் ஊழியர் போஸ்கோவில் கைது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 68).இவர் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் வைத்து நடத்தி வருகிறார். இந்த இன்ஸ்டிட்யூட்டிற்கு அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான இளம் பெண்கள் தட்டச்சு பயில்வதற்காக சென்றனர். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த இன்ஸ்டிட்யூட் இயங்கி வந்தது.
இந்த நிலையில் தட்டச்சு பயில்வதற்கு வந்த ஒரு கல்லூரி மாணவிக்கு சத்தியமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கெட்ட நோக்கத்துடன் அவரது உடலில் தொட்டு செக்ஸ் தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சடைந்த அந்த மாணவி டைப்ரைட்டிங் பயிற்சிக்கு செல்வதை பாதியில் நிறுத்தினார்.

இதை அறிந்த பெற்றோர் மகளிடம் கேட்டபோது, இன்ஸ்டிடியூட் உரிமையாளர் சத்தியமூர்த்தியின் வக்கிரங்களை கூறி அழுதுள்ளார். உடனே அந்த மாணவியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சத்தியமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது ஆண்ட்ராய்டு செல்போனை வாங்கி சோதனையிட்டபோது அதில் தட்டச்சு பயில்வதற்காக வந்த இளம் பெண்கள் மற்றும் மாணவிகளின் புகைப்படங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த மாணவிகளுக்கு தெரியாமல் அங்கங்களை புகைப்படம் எடுத்து ரசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கைதான சத்யமூர்த்தி துவாக்குடி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தின் போதே இந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டை தொடங்கி நடத்தி வந்துள்ளார். 30 ஆண்டுகளாக இந்த இன்ஸ்டிட்யூட் இயங்கி வருகிறது. ஆகவே சத்தியமூர்த்தியால் பல இளம் பெண்கள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாலியல் குற்றச்சாட்டில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.