தேங்காய் போளி
தேங்காயில் நெய் சேர்த்து உண்ணும் பொழுது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நாவில் வைத்ததும் கரைய கூடிய நாவையும், மனதையும், வயிற்றையும் திருப்திபடுத்துகின்றன.அப்படி கடைகளில் வாங்கி ருசித்த போளியை இனி வீட்டிலும் சுலபமாக செய்து உண்ணலாம். குடும்த்தினரையும் ஆச்சரியபட செய்யலாம். நீங்கள் செய்யும் போளியை சுவைத்து பாராட்டு மழையில் நனைய போகிறீர்கள்.
வாருங்கள் சுவையான தேங்காய் போளி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் 2 கப் மைதா மாவு 1/4 கப் எண்ணெய் பூரணம் செய்ய 1 1/2 கப் தேங்காய்த் துருவல் 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் போளி சுடுவதற்கு : 1/4 கப் நெய்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் மைதா மாவை சேர்த்து அதில் எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மைதா மாவை நன்றாக இரண்டு மணி நேரம் மூடி தனியே எடுத்து வைக்கவும் . பிறகு தேங்காய் துருவலை ஒரு கடாயில் இட்டு நன்றாக நீர் வற்றும் வரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அத்துடன் ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் ஆறவிடவும் ஆறவிடவும். பிறகு பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அந்ததனுள் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி இரண்டு பக்கமும் இரண்டு எண்ணெய் உறியும் சீட்டுகளை வைத்து சப்பாத்தி போல் திரட்டி எடுக்க வேண்டும் . ஒரு தவாயில் நெய் விட்டு போளியை போட்டு இருபுறமும் நன்றாக சிவந்து வரும் வரை சுட்டு எடுத்து வைத்து போளி மீது நெய் சிறிது ஊற்றி பரிமாறினால் சுவையான தேங்காய் போலி தயார்.