தரம்சாலா: உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே ஸ்டம்புகளை சிதறடித்து விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் முகமது ஷமி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். கடந்த 4 போட்டிகளில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, நீண்ட பேட்டிங் வரிசை தேவை என்பதால் ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹர்திக் பாண்டியாவையே இரண்டாம் கட்ட வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்தினார்.
ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறினார். இதனால் ஷர்துல் தாக்கூர் 9 ஓவர்களை வீசியாக வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஷர்துல் தாக்கூரின் செயல்பாடுகள் அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா விலகியதால், ரோகித் சர்மா ஷர்துல் தாக்கூரையும் பெஞ்ச் செய்துள்ளார்.
அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி இருவரும் சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து முதல் ஸ்பெல்லை வழக்கம் போல் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் வீசினர். இருவரும் தலா 4 ஓவர்களை வீசிய நிலையில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் சேர்த்து விளையாடி வந்தது. அப்போது 9வது ஓவரை வீச முகமது ஷமி அழைக்கப்பட்டார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி தனது முதல் ஓவரை வீச வந்ததால், ரசிகர்களிடையே ஆர்வமாக பார்க்கப்பட்டது. முதல் பந்திலேயே வழக்கம் போல் பந்தின் சீமை பிடித்து வீசியதால், நியூசிலாந்து அணியின் தொடகக் வீரர் வில் யங் ஸ்டம்புகள் சிதற போல்டாகி 17 ரன்களில் வெளியேறினார். முகமது ஷமி முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து போல்ட் முலம் 2 விக்கெட்டுகளும் கடைசி சதம் அடித்த வீரரின் விக்கெட்டியும் விழ்த்தினர்.
இதனால் இத்தனை நாட்களாக முகமது ஷமியை ஏன் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் 5 கிரிக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் 36 விக்கெட்டுகளுடன் முகமது ஷமி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதலிடத்தில் 44 விக்கெட்டுகளுடன் ஸ்ரீநாத் மற்றும் ஜாகீர் கான் இருவரும் உள்ளனர்.
முதல் பாதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 273 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களுடன் விளையாடி வருகிறது.