புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலமும் இணைந்து பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் மற்றும் நேரு நினைவுக் கல்லூரியின் தலைவர் பொறிஞர் பொன் பாலசுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி திருச்சி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் 3 நாள் கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. கல்லூரியின செயலாளர் பொன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்து தலைமை உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் கே வெற்றிவேல், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் தலைவரும் இந்திரா கணேசன் கல்வி குழுமத்தின் செயலாளருமான பொறிஞர் ராஜசேகரன் மற்றும் யூத் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் இணைப் பேராசிரியருமான முனைவர் இரா. குணசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
நேரு நினைவுக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார், துணை முதல்வர் கே.டி. தமிழ்மணி நோக்க உரை நிகழ்த்தினார், திருச்சிராப்பள்ளி ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர் தெபோரா ஜெனிஃபர் மேற்பார்வையில் ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் விங்களர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முன்னின்று 2400 மாணவ மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
நேரு நினைவுக் கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்கள் முனைவர் ஜி திலகவதி மற்றும் முனைவர் எஸ் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புர ஒருங்கிணைத்தனர் மேலும் இம்முகாமில் பேராசிரியர்கள், யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்களும் கலந்து மாணவ மாணவிகளை ஒழுங்குபடுத்தினர்.