தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர்
அய்யாகண்ணு தலைமையில் திருச்சி அண்ணா சிலை அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
48வது நாளான இன்று வெண்டைக்காய் சுரைக்காய்க்கு சாகுபடிக்கு உரிய விலை இல்லாமல் கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.இதனால் வெண்டைக்காய்,சுரைக்காய் ஆகியவற்றைக் கொட்டி அதை நிர்வாணத்துடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா விவசாயிகளை காப்பாற்றுங்கள் என கோஷம் எழுப்பினர்.
மாலையில் வெண்டைக்காய் சுரைக்காய் அப்பகுதி பொதுமக்களுக்கு இலவசமாக அளித்தனர்.