Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி.

0

'- Advertisement -

 

தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைபள்ளியில் காந்திய சிந்தனைகளை வளர்க்கும் விதமாக மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி

திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காந்திய சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் வகையில் மகாத்மா காந்தியின் புகைப்பட கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் கண்காட்சியினை திறந்து வைத்து பேசுகையில்,

மாணவர்களிடம் காந்திய சிந்தனைகளை வளர்திடவும், மாணவர்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் நற்பண்புகளை வெளி கொணர்வதும் கல்வியின் நோக்கமாக உள்ளது.
பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களிடத்தில் நமது தேசத்தந்தை மகாத்மா காந்திஜி அவர்களின் சிந்தனைகள் மற்றும் விழுமியங்களை கொண்டு சேர்ப்பது இன்றியமையா ஒன்றாகும்.

அதன் அடிப்படையில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் Building Blocks of Sarva Shrestha Bharat இன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களிடம் உண்மை நேர்மை அகிம்சை உள்ளிட்ட காந்திஜியின் சிந்தனைகளையும் நல்விழுமியங்களையும் எடுத்துரைத்தார்
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்.

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியினை காட்சிப்படுத்தி பள்ளி மாணவ மாணவிகளிடம் காந்திய சிந்தனைகளை எடுத்துரைத்தார்.
முன்னதாக
பள்ளி ஆசிரியர் உமா சரண்யா வரவேற்க ஆசிரியை சகாயராணி நன்றி கூறினார்
பள்ளி மாணவர்கள் கண்காட்சியை கண்டுகளித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.