Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்.

0

'- Advertisement -

 

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சமிதி தானுவாஸ் ஆகியவை இணைந்து கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன.

Suresh

இதன் ஒரு பகுதியாக, கோழி வளா்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஆக.28ஆம் தேதி தொடங்கி செப்.2ஆம் தேதி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சியில் பங்குபெற முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

ஆக. 24ஆம் தேதிக்குள் ஆதாா் அட்டையின் நகலுடன் மையத்துக்கு நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 0431- 2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளுமாறு மையத்தின் தலைவா் வே. ஜெயலலிதா தெரிவித்துள்ளாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.