திருச்சி ஸ்ரீ இந்திரா காந்தி கல்லூரி மாணவிகள் 50 பேர் வாந்தி மயக்கம்.கல்லூரி சமையல் கூடத்தை மூடிய உணவு பாதுகாப்பு துறையினர்.
இன்று 16.08.2023 புதன்கிழமை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ இந்திரா காந்தி பெண்கள் கலை கல்லூரியில் சனிக்கிழமை இரவில் இருந்து சுமார் 50 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், செல்வராஜ், வசந்தன், பொன்ராஜ் மற்றும் பாண்டி ஆகியோர் அடங்கிய குழு நேற்றிலிருந்து இந்திரா காந்தி கல்லூரியின் உணவகத்தை ஆய்வு செய்து வந்து அந்த மாணவிகளுக்கு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வண்ணம் உணவு உற்பத்தி ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிந்து அந்த கல்லூரியின் உணவகம் தற்காலிகமாக இன்று 16.08.2023 உணவு தயாரிப்பு தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ரமேஷ்பாபு கூறுகையில் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையில் இருந்து அங்கு சமைக்கப்படும் உணவுகளை உட்கொண்டு மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றிலிருந்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட காரணம் என்பதை அறிய உணவு பாதுகாப்பு துறையின் கீழ் இரண்டு சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு பகுப்பாய்வு அறிக்கை வரப்பெற்றதை அடுத்து இங்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும், இதுபோன்று உணவு சம்மந்தப்பட்ட புகார்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும்.
டாக்டர். ரமேஷ்பாபு மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620 020.
செல்:99 44 95 95 95