வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம்.
திருச்சியில் 8வது நாளாக
வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம்
அரை நிர்வாணத்துடன் ஏராளமானோர் பங்கேற்பு.
விவசாயிகளின் விளை பொருளுக்கு இரட்டிப்பு லாபம் வழங்கப்படும் என்ற மத்திய பாஜக அரசின் தேர்தல் கால வாக்குறுதி மற்றும் நெல், கரும்பு ஆகியவற்றின் ஆதார விலை உயர்த்தி தரப்படும் என்ற மாநில அரசின் வாக்குறுதி ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை முன்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரின் தொடர் போராட்டத்தின் 8வது நாளான இன்று அரை நிர்வாணத்துடன் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தென்னிந்தியநதிகள் இணைப்பு விவசாயிகள்சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் உள்பட
50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முதல் நாள் அரை நிர்வாண போராட்டத்திலும், இரண்டாவது நாள் பட்டை நாமம் போட்டுக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றாவது நாள் வாழைப்பழங்களை வாயில் வைத்துக் கொண்டும், 4வது நாள் முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்தும், 5வது நாள் பட்டை நாமம் போட்டுக்கொண்டும், 6வது நாள் தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டும், 7வது நாள் ஒப்பாரி வைத்தும் ,எட்டாவது நாளான இன்று அரை நிர்வாணத்துடன் வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்தனர். 15 நாட்கள் மட்டுமே இப் போராட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதிலும் தினசரி 25 நபர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டுமென காவல் துறையினர் நிபந்தனை விதித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் மாநில துணை தலைவர் மேகராஜன்,மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் ஏராளமான விவசாயி கலந்து கொண்டனர்.