திருச்சி வயலூரில் மூன்றாம் ஆண்டு பாரம்பரிய இனசேவல் கண்காட்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்ட கிளி மூக்கு விசிறிவால் சேவல் நல சங்கம் சார்பில் வயலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 3-ம் ஆண்டாக சேவல் கண்காட்சி
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது.
இக்கண்காட்சியில் ஓமன் நாட்டில் இருந்தும்,
கர்நாடகா, ஆந்திரா,
தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும்,
கன்னியாகுமரி,காரைக்கால்,
கோயம்புத்தூர், மதுரை, சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாரம்பரிய வண்ண சேவல்களான கிளி மூக்கு, மயில், காகம் ஊலான், கருங்கிரி, வெள்ளை மற்றும் பூதி போன்ற போன்ற 300க்கும் மேற்பட்ட பாரம்பரிய இன சேவல்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன.
கண்காட்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சேவல்களுக்கு முதல் பரிசாக ஐந்து சேவலுக்கு நான்கு கிராம் தங்க நாணயமும், இரண்டாம் பரிசாக 10 கிராம் தங்க நாணயம் 10 சேவல்களுக்கும், மூன்றாம் பரிசாக 15 சேவல்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், நான்காம் பரிசாக 20 சேவல்களுக்கு டேபிள் பேன் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் கண்காட்சியில் நம்பர் 1-ன் இடம் பிடித்த சேவலுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
விழாவிற்கு தஞ்சை விஸ்வநாதன், மேலூர் குணா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கை வேலன்,ஜெயராஜ், ரகுநாத் மற்றும் திருச்சி மாவட்ட கிளி மூக்கு விசிறிவால் சேவல் நல சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்