ஸ்ரீரங்கத்தில் இருசக்கர வாகன பலே திருடன் கைது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் ஐயப்பன் தெருவை சேர்ந்தவர் குமார வடிவேல். இவரது மகன் ஆனந்த் பாபு. இவர் திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் உள்ள கார் பார்க்கிங் அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றார்.
சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வ வண்டியை எடுக்க திரும்பி வந்தார். அப்போது வண்டியை காணவில்லை. இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திராகாந்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் வாகனத்தை திருடியதாக திருச்சி மலைக்கோட்டை சருக்குப்பாறை பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர் .
இவரிடம் இருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர் மீது ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை, கோட்டை, அரியமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 25 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.